Breaking News

வியாபாரத் திட்டம் என்றால் என்ன? (Business Plan)


ஒரு வியாபார கருத்து பற்றி எழுதப்பட்ட திட்ட ஆவணத்திற்கு பெயர் வியாபார திட்டம்.
இந்த
   
       
   
  ஆவணத்தில் இருக்கவேண்டியவை- வியாபாரத்தின் தற்போதைய நிலை, எதிர்காலச் சந்தை பற்றிய சிந்தனை, அடையவேண்டிய நோக்கம், நோக்கத்தை அடைவதற்கான நிதி, எதிர்கொள்ளவேண்டிய சவால்கள், மற்றும் வியாபார செயல் திட்டம்.
இந்த வியாபாரத் திட்டம் உங்கள் நிறுவனத்தின் எல்லா விபரங்களைக் கொண்ட ஒரு சுய விமர்சனம் என்று கூறலாம். ஒரு நல்ல திட்டம் வியாபாரத்தில் ஏற்படும் எதிர்பாராத சிக்கல்களைத் தீர்க்க, நல்ல முடிவுகளை எடுக்க உதவவேண்டும். இத்திட்டத்தில் வியாபாரத்திற்கு முதலீடு எப்படி திரட்டப்பட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், நீங்கள் எப்போது எவ்வளவு கடன்/பங்கு முதலீடு திரட்டுவீர்கள், எந்த வருமானத்தைக் கொண்டு கடன், வட்டி திருப்பி தரப்படும், முதலீட்டிற்கு லாபம் கிடைக்கும் என்பது தெரியவரும்.
தொழில்முனைவோருக்கு தன் வியாபாரத் திட்டத்தை எழுதுவது சிரமமாக இருக்கலாம், அதற்கு இத்துறையில் உள்ள வல்லுநர்களை பயன்படுத்தலாம். இந்தத் துறை வல்லுநர்கள், நீங்கள் குறிப்பிடும் சந்தையின் விபரங்களை சேகரித்து, உங்கள் வியாபார நோக்கம், செயல் திட்டம் ஆகியவற்றுடன் இணைத்து சிறப்பான வியாபாரத் திட்ட அறிக்கையை உருவாக்கித் தருவார்கள்.
உருவாகப்போகும் திட்டத்தை நன்கு விலக்கிவிட்டு, திட்ட அறிக்கை உருவாக்குவதற்கு ஒரு கால அளவை நிர்ணயுங்கள். அதன்பின், திட்ட அறிக்கை தயாரிக்கும் நிபுணர் குழு ஆராய்ச்சியை துவங்கிவிடும். உங்கள் நிறுவனம் பற்றியும், நீங்கள் இருக்கும் வியாபார சந்தைப் பற்றிய முழுமையான ஆய்வுக்கு பின் அறிக்கை தயாராகும். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் உங்கள் நிறுவனத்தின் நோக்கங்களும், செயல் திட்டங்களும் வகுக்கப்படும். வியாபார நோக்கம் தெளிவானால், அதனை அடையும் செயல் திட்டங்களும் தெளிவாக உருவாகும்.
வியாபார
   
       
   
  மேலாண்மை நோக்கத்தில் பார்க்கும்போது, வியாபாரத் திட்டம் என்பது நம் நோக்கங்களை எப்படி வரிசைப்படுத்துவது, வளங்களை எப்படி பிரித்து வெவ்வேறு பயன்பாட்டிற்கு செலுத்துவது என்பதைத் தீர்மானிக்க உதவும். இந்த திட்டம், வியாபாரத்தின் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

#வியாபாரத்_திட்டம்_என்றால்_என்ன? 
#Business_Plan

No comments