Breaking News

வணிகம் என்றால் என்ன?



மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும்
பூர்த்தி செய்யும் இலாப நோக்குடைய மற்றும் இலாப நோக்கற்ற எந்தவொரு பொருளாதார செயற்பாடும் வணிகம் அல்லது வர்த்தகம் எனலாம். வணிகமானது ஆரம்பகாலகட்டத்திலிருந்து பிரதானமாக நான்கு கட்டங்களாக வளர்ச்சி அடைந்துள்ளது.

முதலாவது பண்டமாற்று முறை ஆகும்.
அதாவது ஆரம்பகால கட்டத்தில் மக்கள் தங்களது தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய தம்மிடமுள்ளதை மற்றவரிற்க்கும், தமக்கு தேவையானதை இன்னொருவரிடமிருந்தும்
   
       
   
  பெற்றுக்கொண்டனர். இதில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக இரண்டாம் கட்டத்திற்க்கு நகர வேண்டிய தேவை ஏற்ப்பட்டது. அதாவது ஒரு பொதுவான பரிமாற்று ஊடகமாக பணம் பயன்படுத்தப்பட்டு கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றது. பின்னர் கைத்தொழிற்புரட்சி அதனைத்தொடர்ந்து தகவல் தொழில்நுட்பபுரட்சி என மாற்றம் கண்டுள்ளது.

வணிகமானது வர்த்தகம் +உற்பத்தியினூடாக கட்டியெழுப்பப்படுகின்றது. வர்த்தகம் என்பது பொருட்களை நுகர்வோரிற்க்கு விநியோகிப்பது ஆகும். உற்பத்தி என்பது மூலப்பொருட்களை முடிவுப்பொருட்கள் ஆக்கும் செயற்பாடு ஆகும். வணிகமானது பல்வேறு செயற்பாடுகளினூடாக பொருட்கள் சேவைகளை நுகர்வோரிற்கு வழங்குகின்றது.


வணிகத்தை இலாபநோக்கமுள்ள, இலாபநோக்கமற்ற சேவை வணிகம் என இரு பிரிவுகளாக நோக்கலாம்.  இலாபநோக்கமுள்ள வணிகங்கள் வருமானத்திலிருந்து செலவினை கழித்து வரும் மீதியான இலாபத்தைக்கொண்டு சந்தையில் நிலைத்திருக்கும். சேவை நோக்கமுள்ள வணிகங்கள் சந்தா மற்றும் பிறவருமானங்கள் மூலம் சந்தையில் நிலைத்திருக்கும். வணிகமானது இன்று பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது. அதாவது போட்டியாளர்களின் அதிகரிப்பு, மின் வணிகம் எனக் கூறிக்கொண்டு செல்லலாம். எங்கு எதற்கெடுத்தாலும் போட்டிதான்.


இன்றைய
   
       
   
  உள்ளங்கையளவு உலகத்தில் ஊன் இன்றி, உறக்கமின்றி அனைவரும் இனையபாவனையே. எந்தவொரு இடையூறுமின்றி விற்ப்பனையாளரும் கொள்வனவாளரும் நேரடியாக பொருட்களை இணையத்தின் உதவியுடன் பரிமாற்றிக்கொள்கின்றனர். இது வணிகத்தின் பாரிய வளர்ச்சி ஆகும். இருந்தாலும் பல வணிகங்கள் எதிர்நோக்கும் சவாலும் இதே.


இன்றைய இணைய உலகில் வணிகங்கள் தரமான பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்வது மட்டுமன்றி நுகர்வோரை கவருவதற்காக  விளம்பரங்களை மேற்க்கொண்டு அதனூடாக தமக்கென சிறந்த வாடிக்கையாளர்களை பெற்றுக்கொள்வதனூடாகவே போட்டி மிகுந்த வணிகச்சூழல் மத்தியில் தமது ஸ்திரத்தன்மையை நிலைநாட்டிக்கொள்ளலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

    வணிகம் இன்றி மனிதன் இல்லை....
    மனிதன் இன்றி வணிகம் இல்லை....

Post Comment