சென்செக்ஸ் என்றால் என்ன? ( Sensex ) , நிப்டி என்றால் என்ன? ( Nifty)
செய்திகளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 122 புள்ளிகள் உயர்ந்தது அல்லது 54 புள்ளிகள் சரிந்தது என்று கேள்விப்பட்டிரிப்பீர்கள்
அதுதான் சென்செக்ஸ் ( Sensex ).
சென்செக்ஸ் பங்குச் சந்தையின் இன்றைய நிலவரத்தை குறிக்கும் ஒரு குறிட்டு எண் ஆகும். மும்பை பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க 30 நிறுவனங்களின் அன்றைய சந்தை செயல்பாட்டை வைத்து இதை கணக்கிடுகிறார்கள. இந்நிறுவனங்களை 12 தொழில் துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்நிறுவனங்களின் மதிப்பு இன்று உயர்ந்தால் அதாவது இந்நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு விற்கப்பட்டால் சென்செக்ஸ் மதிப்பு உயரும் அல்லது இந்நிறுவனங்களின் மதிப்பு இன்று குறைந்தால் சென்செக்ஸ் மதிப்பு குறையும்.
இதற்கும் நாம் உழவர் சந்தையை உதரணமாக எடுத்க்கொள்வோம். உழவர் சந்தையில் 100 கடைகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் இன்றைய சந்தை நிலவரத்தை அறிய நாம் 100 கடைகளையும் விசாரிப்பது கொஞ்சம் சிரமமான காரியம். அதற்குபதிலாக நாம் முக்கியமான ஒரு 10 கடைகளின் இன்றைய வியாபரத்தை வைத்து சந்தையின் வியாபாரத்தை அறிந்து கொள்ளலாம் . இதைத்தான் சென்செக்சில் 30 நிறுவனங்களை வைத்து கணக்கிடுகிறார்கள்.
நிப்டி ( nifty)
இதே போல் எண் எஸ் ஈ ( NSE ) குறியீடு எண் நிப்டி ( nifty). இது 50 நிறுவனங்களை வைத்து
இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது எப்படி ஒரு பங்கை நாம் வாங்கி விற்கிறோமோ அதேபோல் இந்த நிப்ட்டியை நாம் வாங்கி விற்கலாம். இதைப்பற்றி futures and option இல் மேலும் விரிவாக பார்க்கலாம்
ஒரு நிறுவனம் சென்செக்ஸ் அல்லது நிப்டி இல் சேர்த்துக் கொள்ளப்படுகிறது அல்லது வெளிஎற்றபடுகிறது என்பது பொதுவாக பங்குச் சந்தையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதைக் கணக்கில் கொண்டு பங்குகளின் மதிப்பு ஏறவோ இறங்கவோ செய்யும்.
No comments